''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Tuesday, February 5, 2008

தமிழ் நண்பர்களே நண்பிகளே நீங்கள் பாடசாலை செல்லும் வயதை அடைந்து விட்டால் உங்கள் பிறந்ததினக்கொண்டாட்டத்தை எப்படிச்செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தனியாகவோ அல்லது உங்களுக்கு மூத்தசகோதரர்கள் இருப்பின் அவர்களுடன் சேர்ந்து தீர்மானித்து உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்.உங்கள் பிறந்தநாள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும்.

நம்மில் இன்னும் சிலர் 7வயதைத்தாண்டிய பிள்ளையின் பிறந்ததின நிகழ்வை தமது உறவினர்கள் நண்பர்களை அழைத்து அவர்களுக்காக அம்மாக்கள் அறுசுவையுடன் அண்டாக்களில் சமையல் செய்ய அப்பாமார் போத்தல்களும் வாங்கிவைக்க வந்தவர்கள் போத்தல்களையும் காலியாக்கிப்போட்டு அம்மாக்கள் சமைத்தசமையலை மூக்குமுட்டசாப்பிட்டுப்போட்டு,அம்மாக்கள் ஒரு பக்கம் ஊர்வம்பு அளப்பினம், அப்பாக்கள் தண்ணியில அரசியல் கதைப்பினம்.சில வேளையில் அப்பாக்களுக்கிடையில் சண்டையும் வந்திடும். நண்பர்களே, நண்பிகளே! இது தேவையா? உங்கள் பிறந்ததினத்தை சொல்லி இவர்கள் வயிறு நனைப்பதும் வாய் அளப்பதும் இனியும் வேண்டாம்.

இந்த அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும் செலவு செய்யும் பணத்தில் அரைவாசி என்றாலும் நீங்கள் தாயகத்தில் உள்ள உங்கள் உறவினர்யாராவது வறுமை நிலையில் இருப்பின் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கும் மனமகிழ்ச்சி ஏற்படும்.அத்துடன் அவர்களும் உங்களை வாழ்த்துவதுடன் மகிழ்ச்சியும் அடைவார்கள்.அப்படி உறவுக்காறர் இல்லாவிட்டால் உதவி எனும் இணையத்தளத்துக்கு போய்ப்பாருங்கள் தாயகத்தில் எவ்வளவு ஏழை அனாதைக்குழந்தைகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு உதவலாம்.

No comments: