''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Tuesday, May 26, 2009

Friday, October 17, 2008

எனக்கு வயது(16.10.2008ல்)எட்டு ஆயிற்றுதங்கோ

பாட்ஷா பாட்டில் வருவது போல் நான் முதல்
எட்டுத்தானுங்கோ-அப்ப ஆடாத ஆட்டமும் ஆடத்தான்
வேணுமங்கோ ஆனால் வீட்டில விடுகிறாங்க இல்ல
இரண்டாம் எட்டுக்கு தள்ளுறாங்க

Thursday, October 16, 2008

Wednesday, September 3, 2008

Saturday, August 30, 2008

வங்களதேசத்தில் உள்ள கேசாப்பூர் என்ற மருத்துவமனையில் இரண்டு தலையுடன் பிறந்த ஆண் குழந்தையின் படம் இதுவங்கோ

5.5கிலோ நிறையுடன் பிறந்துள்ள இந்தக்குழந்தைக்கு கிரோன் என்று பெயர்வைத்துள்ளார்கள்.

Monday, June 23, 2008

இரண்டு கைகளும் கால்களும் இல்லாமல் 04.12,1982ல் அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் என்ற நகரத்தில் பிறந்த இவர். அவுஸ்ரேலியாவில் உள்ள பிரபல்யமான Main stream school என்ற பாடசாலையில் படித்து வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார்.

Wednesday, May 28, 2008

2008ம் ஆண்டின் ஐரோப்பியக்கிண்ணத்திற்கான கால்ப்பந்தாட்டப்போட்டிகள் 07.06.2008ல் ஆரம்பமாகின்றது. 16 நாடுகள் இப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றுள்ளன. இப்போட்டிகள் சுவிஸ் நாட்டின் GENF,BERN,BASEL,ZÜRICH ஆகிய நகரங்களில் உள்ள விளையட்டு அரங்குகளிலும். ஒஸ்றியாவின் SALZBURG,WIEN,KLAGENFURT,INNSBRUCK ஆகிய நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்குகளிலும் நடைபெறயிருக்கின்றது.

Tuesday, May 20, 2008

எனது நண்பி சிவரூபன் வர்ஷா தனது 07வது பிறந்தநாளை 10.05.2008ல் தனது பெற்றோருடனும், அக்கா கீர்த்தி, மற்றும் நண்பர்கள், நண்பிகளுடன் கொண்டாடினார், அவரை நானும் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவாழ்த்துகின்றேன்.
Rustஎன்ற இடத்தில் உள்ள Funny-world க்கு சென்றபோது எடுத்த படங்கள் சில

Friday, May 16, 2008

ஆனந் கூறிய அறிவுரைகள்

செஸ் ஆடும்போது வெறி இருக்கக்கூடாது.ஜெயிச்சுக் காட்டணும்கிற நம்பிக்கை,விடாமுயற்சி இருக்கணும். ஆர்வம் இருக்கணும்.முக்கியமா பொறுமை இருக்கணும். இவை எல்லாம் இருந்தா நீங்களும் சாம்பியன் ஆகலாம்.
இந்தியத்தமிழரான விஸ்வநாதன் ஆனந் உலக செஸ் சாம்பியனவார்.1983ல் 14வயதில் தேசிய செஸ் சாம்பியன் ஆனார். 15வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதினைப்பெற்றார்.16வயதில் தேசிய சாம்பியனாக மேலும் இருதடவைகள் விருதினைப்பெற்றார். இவர் வேகமாக ஆட்டங்களை விளையாடுவதனால் மின்னல் வேகக் குழந்தை என்ற பட்டத்தையும் பெற்றார்.

Wednesday, May 14, 2008

பாடசாலை விடுமுறைக்கு நண்பர்களுடன் konstanz என்ற நகரத்தில் உள்ள mainau என்று அழைக்கப்படும் பூக்களின் தீவுக்குச் சென்றபோது எடுத்தபடங்கள்.

பூக்களின் தீவில் புகுந்தவுடன்.
மலர்களினால் மயில்போல் அழகிய உருவம்
குதிரை வண்டியுடன் கூட்டமாக நாங்கள்.....
மலர்களினால் ஒரு மலர் அதனுடன் நான்....
பூக்களின் தீவில் வண்ணாத்திப்பூச்சிகளுக்கு ஒரு தோட்டம் அங்கே நான்.....
கப்பலில் கரை நோக்கிவந்தபோது....
பூக்களின் தீவில் இருந்து திரும்பிவந்து konstanz கரையில் நாங்கள்......

Thursday, May 8, 2008

ஜேர்மனியின் பிறாங்போட் நகரில் 2007ல் நடந்த மோட்டர் கண்காட்சியில் நிறுத்தப்பட்டிருந்த புதிய Lamborghini கார் இதுவங்கோ.இதன் பெறுமதி என்ன தெரியுமோ ஒரு மில்லியன் யூரோக்கலாம்.340கிலோமிற்றர்வேகம் வரை ஓடமுடியுமாம்.

Wednesday, May 7, 2008

Tuesday, May 6, 2008

ஜேர்மனியில் 2006ல் நடந்த உலகக்கால்ப்பந்தாட்டத்தின்போது ஜேர்மனியின் Gelsenkirchen என்ற நகரத்து கால்ப்பந்துவிளையாட்டு ஆதரவாளர்களினால் விளையாட்டில் பங்குபற்றிய நாடுகள் சிலவற்றின் கொடிகள்போன்று சிறுபூக்கன்றுகளைக்கொண்டு அமைத்துள்ள அருமையானகாட்சி இது.

Monday, May 5, 2008

Sunday, May 4, 2008

எங்கள் நாட்டில் விளையும் பழங்களும்,அவற்றின் டொச் பெயர்களும்.


முந்திரிகைப்பழம் -- Traube

வத்தகப்பழம் -- Wassermelone

புளியம்பழம் -- Tamarinde

பப்பாசிப்பழம் -- papaya

தோடம்பழம் -- Orange
மாம்பழம் -- mango

பலாப்பழம் -- Jackfrucht

கொய்யாப்பழம் -- Guave


வாழைப்பழம் -- Banane

அன்னாசிப்பழம் -- ananas

மாதுளம்பழம் -- Granatapfel

Monday, April 21, 2008

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா

பாதிப்பழம் உன்னிடம்
பாதிப்பழம் என்னிடம்

கூடிக் குலாவி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்.

Friday, April 18, 2008

இதுதானுங்கோ சுதந்திரப்பிரகடனம் செய்துகொண்ட கொசோவா நாட்டின் கொடி.