''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Friday, February 22, 2008

வான்மீது வல்லூறாய் வந்து
குண்டு போட்டு கொன்றழிக்கும்
விமானம் அல்ல இது.
கண்ணிமைக்கும் நேரத்தில்-உலகக்
கனவான்களை அப்போ காவிச்சென்ற
கண்காட் இது.
(32மணிநேரத்தில் பூமியைவலம் வந்தது)

Sunday, February 17, 2008

மகத்தான மகாத்மாவே
என் தேசத்தில் காந்தீயம்
எரிந்து போனதே..
உதைக்கும் பந்தால்
உலகத்துக் கோடி -உள்ளங்களை
கொள்ளை கொண்டவனே
உன்னருகில்.

Tuesday, February 12, 2008

எங்க ஊரு புள்ளிமானுங்க இது

புள்ளிப்புள்ளி மானே
துள்ளித்துள்ளி ஓடி வா
அள்ளி இந்தப்புள்ளியை
யார் உனக்குத்தந்தது.

கண்ணிரண்டும் கூர்மை
காதிரண்டும் கேள்மை
பெண்ணினத்தின் சாயல்
தெரியுதுந்தன் வடிவில்.

பென்னம்பெரும் காட்டில்
தன்னந்தனி செல்லுகையில்
உன்னுடலில் முள்ளுகள்
குத்துவதில்லையோ.

Monday, February 11, 2008

பாரதியார் பாடலுடன் நான்.....

ஓடி விளையாடு பாப்பா! -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.


சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!


கொத்தித் திரியுமந்தக் கோழி - அதை
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேனும் பாப்பா!


பாலைப் பொழிந்து தரும் பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா!


வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!


காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு தரும் நல்ல பாட்டு,
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா!


பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!


துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

Posted by dancer at 11:45 AM 0 comments Links to this post



Saturday, February 9, 2008

Saturday, February 9, 2008

Tuesday, February 5, 2008

நம்மில் இன்னும் சிலர்.............

தமிழ் நண்பர்களே நண்பிகளே நீங்கள் பாடசாலை செல்லும் வயதை அடைந்து விட்டால் உங்கள் பிறந்ததினக்கொண்டாட்டத்தை எப்படிச்செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தனியாகவோ அல்லது உங்களுக்கு மூத்தசகோதரர்கள் இருப்பின் அவர்களுடன் சேர்ந்து தீர்மானித்து உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்.உங்கள் பிறந்தநாள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும்.

நம்மில் இன்னும் சிலர் 7வயதைத்தாண்டிய பிள்ளையின் பிறந்ததின நிகழ்வை தமது உறவினர்கள் நண்பர்களை அழைத்து அவர்களுக்காக அம்மாக்கள் அறுசுவையுடன் அண்டாக்களில் சமையல் செய்ய அப்பாமார் போத்தல்களும் வாங்கிவைக்க வந்தவர்கள் போத்தல்களையும் காலியாக்கிப்போட்டு அம்மாக்கள் சமைத்தசமையலை மூக்குமுட்டசாப்பிட்டுப்போட்டு,அம்மாக்கள் ஒரு பக்கம் ஊர்வம்பு அளப்பினம், அப்பாக்கள் தண்ணியில அரசியல் கதைப்பினம்.சில வேளையில் அப்பாக்களுக்கிடையில் சண்டையும் வந்திடும். நண்பர்களே, நண்பிகளே! இது தேவையா? உங்கள் பிறந்ததினத்தை சொல்லி இவர்கள் வயிறு நனைப்பதும் வாய் அளப்பதும் இனியும் வேண்டாம்.

இந்த அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும் செலவு செய்யும் பணத்தில் அரைவாசி என்றாலும் நீங்கள் தாயகத்தில் உள்ள உங்கள் உறவினர்யாராவது வறுமை நிலையில் இருப்பின் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கும் மனமகிழ்ச்சி ஏற்படும்.அத்துடன் அவர்களும் உங்களை வாழ்த்துவதுடன் மகிழ்ச்சியும் அடைவார்கள்.அப்படி உறவுக்காறர் இல்லாவிட்டால் உதவி எனும் இணையத்தளத்துக்கு போய்ப்பாருங்கள் தாயகத்தில் எவ்வளவு ஏழை அனாதைக்குழந்தைகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு உதவலாம்.

எனது 7வது பிறந்தநாள் படங்கள் சில...........

Sunday, February 3, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........

எனது மச்சான் தர்மராசா நிருஷன் 03.02.08 இன்று தனது 10வது பிறந்தநாளை லண்டனில் உள்ள தனது இல்லத்தில் நண்பர்கள் நண்பிகள் அம்மா அப்பா சித்தி சித்தப்பா தம்பி பிரஹாஸ் தங்கை பிரியந்தாவுடன் கொண்டாடுகின்றார். பல்கலையும் பெற்றுப்பல்லாண்டு வாழவாழ்த்துகிறேன்.

Saturday, February 2, 2008

எனது நண்பன் சிவராசா சருஹான் இன்று சனிக்கிழமை தனது 8வது பிறந்ததினத்தை தனது நண்பர்கள், நண்பிகள்,பெற்றோர் தனது தங்கையுடன் கொண்டாடுகிறார்.இவரை நான் பல்கலையும் பெற்று பல்லாண்டு நலமுடன் வாழவாழ்த்துகிறேன்.