''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Wednesday, January 30, 2008

பொங்கல் விழாவிற்காக அப்பா எழுதிய நான்பாடியகவி............

என் ஊரில் இருந்து என் நண்பனின் குரல்
எங்களுக்கும் பொங்கல் திருநாளா?

அதிகாலையிலே ஏர் பிடிக்கசென்ற-எங்கள்
அப்பாவை ஏகே பிடித்தவர் என்று
இழுத்து சென்றனராம்
ஈனப்பிறவிகள்-அன்று மாலையிலே
சாலையில் பிணமாகபோட்டனராம்

பாவிகள் பள்ளியிலே போட்டகுண்டால்-எங்கள்
அம்மாவையும் நாம் இழந்தோம்
பாதியிலே படிப்பை நிறுத்தி-எம்மை
பாதுகாத்த அண்ணாவையும் நாம் இழந்தோம்-இப்போ

தங்கவீடுமில்லை தார்றோட்டில் திரிகின்றோம்
உணவுக்காக-என் தங்கை
தவியாய் தவிக்கின்றாள் படிப்பதற்காக!

பொங்கல்திருநாளா? புதுவருடத்திருநாளா?
எங்களுக்கு எதுவுமில்லை-உத்தமரே!
உமக்கு இரக்கமிருந்தால்-எமக்கு
உதவிடுவீர்

Tuesday, January 29, 2008

என் சின்ன வயதில் எடுத்த சிலபடங்கள்................



Monday, January 28, 2008

Sunday, January 27, 2008

எனக்கு பிடித்ததும் பிடிக்காததும்........

பாடிக்கொண்டே ஆடப்பிடிக்கும்
படம்பார்த்துக்கொண்டும் ஆடப்பிடிக்கும்
வீட்டில் சும்மாயிருக்கப்பிடிக்காது
பகலில் படுத்துநித்திரை கொள்ளவும் பிடிக்காது
பந்து விளையாடப்பிடிக்கும்
படங்கள் வரையவும் பிடிக்கும்-வீட்டில்
படிக்கச்சொன்னால் பிடிக்காது
பருமனா வரவும் பிடிக்காது
நண்பர்கள் நண்பிகள் பிடிக்கும்
நாடுபல பார்க்கப்பிடிக்கும்
நாயைக்கண்டால் பிடிக்காது
நாவல் கலரும் பிடிக்காது-எனக்கு
நம் நாட்டு உணவு பிடிக்கும் -அதிலும்
நண்டுக்கறி நல்லாப்பிடிக்கும்
புதுப்புது ஆடைகள் அணியப்பிடிக்கும்- சின்னச்சின்ன
புத்தகம் வாசிக்கப்பிடிக்கும்